என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜாக்டோ ஜியோ
நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ"
- உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
- அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீனன், செல்வி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.
பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
பெரம்பலூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை 56, 100, 101-யை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெற இருக்கிற வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது.
மாநாட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தயாளன், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கவியரசன், உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மகேந்திரன் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த போராட்ட விளக்கவுரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரி அனந்தன் நன்றி கூறினார். கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.

×

X